Friday, May 31, 2024

தினம் ஒரு பழமொழி

 தினம் ஒரு பழமொழி

சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?


பொருள்/Tamil Meaning:

மாணிக்கவாசகர் இயற்றிய திருவெண்பா சிதம்பரம் சிவன் கோவில் அம்பலத்திலும் ஊரிலும் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது,

 ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பதற்கேற்ப அந்த ஊரில் பிறந்த குழந்தைகூட எளிதில் திருவெண்பாவை எளிதில் கற்றுக்கொள்ளும் என்பது செய்தி.

தினம் ஒரு பழமொழி ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.

 தினம் ஒரு பழமொழி

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.

பொருள்:

ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.

உண்மையான பொருள்:

மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும்,  போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக  கெளரவர்களிடமே  இருக்கிறேன் என்று சொன்னது.

தினம் ஒரு பழமொழி ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.

 தினம் ஒரு பழமொழி

ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல.

பொருள்:

மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார்,

அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள்.

விளக்கம்:

ஐயா தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வேலை வாங்குவதால் அவர் உடல் கதிர்போல் இளைத்து இருக்கிறது.

அம்மாளோ சொகுசாக வீட்டில் சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது.

தினம் ஒரு பழமொழி 082. பழமொழி

 தினம் ஒரு பழமொழி

082. பழமொழி:

எட்டு வருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.

பொருள்:

எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.

விளக்கம்:

எருமைக்கடா என்றது அடி முட்டாளைக் குறித்தது. எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம்.

இதுபோன்று அடி முட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்.

எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல.

கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழு போன இடம்.

கழுதைப்பால் குடித்தவன் போலிருக்கிறான்.

காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?

குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல் செய்கிறாய்.

கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிறதுபோல.
நெல்லுக் காய்க்கு மரம் கேட்டவன்போல.

தினம் ஒரு பழமொழி ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!

 தினம் ஒரு பழமொழி

ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!

பொருள்:

நன்மை நடப்பதும், தீமை நடப்பதும்  பெண்கள்  கையில் தான் இருக்கிறது.

உண்மையான பொருள்:

நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
தினம் ஒரு பழமொழி

ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!

பொருள்:

நன்மை நடப்பதும், தீமை நடப்பதும்  பெண்கள்  கையில் தான் இருக்கிறது.

உண்மையான பொருள்:

நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

தினம் ஒரு பழமொழி

 தினம் ஒரு பழமொழி சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? பொருள்/Tamil Meaning: மாணிக்கவாசகர் இயற்றிய திரு...